கடலோடி: (தொடர்ச்சி….)

செப்ரெம்பர் 30, 2007

மயிர்சிலிர்த்தான் அவன்
மரங்கள் அதிர
மடக்கி வளைத்தான்
மேலெழும்ப தன்வாலை
ஸத்வ வீரியத்தை வளர்த்து
ஸத்தியம் வெல்ல பிராத்தித்து
ஸகலமும் அவனானான்
ஸுகமாய் ராமனை நினைத்து

Advertisements

கடலோடி: (தொடர்ச்சி….)

ஓகஸ்ட் 16, 2007

அதிசயத்தைக் காண
அடங்காகூட்டம் எங்கும்
அந்தணர் ஆகாசத்தவர்
அங்கிருந்தே ஆசிகூற
அலட்டலில்லா அடக்கத்துடன்
அம்பு போல் கிளம்பினான் ஆஞ்சனேயன்!

கடலோடி: (தொடர்ச்சி….)

ஓகஸ்ட் 13, 2007

பூகம்பம் வந்ததோ
பூதங்கள் கிளம்பியதோ
பூமியின் தருணம் முடிந்ததோ
புரியாது கலங்கியது கானகம்
புரட்டிப்போட்டு தொடங்கினான்
புன்முறுவலுடன் அவன் காரியத்தை

கடலோடி: (தொடர்ச்சி….)

ஓகஸ்ட் 10, 2007

ஜாம்பவான் தூண்ட அனுமன்
ஜயம் மட்டுமே கொள்ள
ஜலக்கடலை தாண்ட
ஜாஸ்தி யோசிக்காது ஒப்பினான்
பசுங்கூட்டத்து தலையாம் காளை
பலர் வியக்க தலைநிமிர்ந்தான் அவ்வேளை
பர்வதத்தின் மேல் நடை பழகினான்
பாயப்போகும் கடல் நோக்கி மனங்குவித்தான்
பக்ஷிகள் மிருகம் மதயானை வலம்வர
பம்பரமாய் சுற்றினான் ராமனை நினைத்து
மலைநடுங்க கால் அமுக்கி
மரங்களாடி மலர்ச்சொரிய
மணம் வீசி மன் அதிர
மனிதன் மிருகம் தான் நடுங்க
மலைக்காது மஹாசக்தியுடன்
மிரட்டலாய் கிளம்பினான் கடலோடி

கடலோடி: (தொடர்ச்சி….)

ஓகஸ்ட் 9, 2007

சுந்தரகாண்டத்தின் பொருள் உணர்ந்தோர்
சுவையொடு வாழ்வின் அழகுணர்ந்தோர்
சீடனேயாயினும் ஆண்டவன்
சீண்டிப்பார்த்தே சீர்திருத்துவான்
சடமான உள்ளங்கட்கும்
சித்தம் விளக்கும் சுந்தரகாண்டம்
சலனமில்லா மனங்கொடுக்கும்
சாந்தமும் சுகமும் பெரிது வளரும்
சகலகலா வல்லவன் சடையனின் அவதாரம்
சகலமும் அவனே இதில் வானரனே!

கடலோடி:(ஆஞ்சனேயர் கடலை கடப்பது)

ஓகஸ்ட் 4, 2007

பக்தனுக்கு பதம் உணர்த்த
பதிவிரதை பாதம் பதிக்க
பலமாய் தோன்றினர்
பக்தனாய் அனுமன் பாவையாய் இலக்குமி
பூட்டிய மாடுபின்னே செல்லும் வண்டிபோல
பூட்டாத மனம்பின்னே பூதவுடல் செல்லும்
பவ்வியமாய் மனஞ்சென்றான் முன்னே அனுமன்
பயமில்லா பின் உடல் சென்றான் கடல்மேலே

முன்னுரை

ஓகஸ்ட் 4, 2007

சுகமே வாழ்வு சுகமே வளமை
சுகமே வெற்றி சுகமே நிச்சயம்
சுறுசுறுப்பை ஏற்று மனஞ்சுருங்காது
சுவையாய் சுகம் உரைப்பான் அனுமன்
சுப்பிரபாதம் எப்பாரதமும் வாழ்த்தும்
சுகம் சுந்தர காண்டமோ யாவர்க்கும் வாழ்வுயர்த்தும்

கைலாதிபதி

ஓகஸ்ட் 2, 2007

கையிலைக்கு மனஞ்சென்றால்
கணக்கில்லா இரகசியமாம்
காணவும் கண்கோடி வேண்டும்
காற்றினிலும் கலக்க வேண்டும்
காணப்பெறா பேரருளாய்
கண்முன்னே நிற்பான்
காளியும் கங்கையுமே கண்ட அவனை
கல்லாதவனும் காணுவான்
கல்லில் காற்றில் கரையில் கண்டு
கடைத்தேறுவாய் மனமே வாழ்வை